அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இந்திய சுந்தந்திரமும் அஹ்மதிய்யா ஜமாத்தும்


சுதந்திரம் என்பது மனிதனின் பிறப்புரிமையாகும். இஸ்லாம் மனித இயல்புக்கேற்ற மார்க்கமாகும் எனவே இஸ்லாம் மனிதனின் இந்த உரிமையையும் பாதுகாத்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சுதந்திரமும் ஒன்றாகும் மார்க்க உரிமைக்காகவும், மனசாட்சி உரிமைக்காகவும், நாட்டுரிமைக்காகவும் குரல் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். இஸ்லாத்தின் எதிரிகளோ தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மற்றவர்கள் மீது திணிக்க முயன்றார்கள். அந்த எதிரிகள் பலவந்ததினாலும், பெரும்பான்மை என்ற ஆனவத்தினாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் எந்தக் குறையையும் விட்டுவைக்கவில்லை.