அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

பயங்கரவாத முல்லாக்கள்


உலகில் தோன்றிய எந்த சமயம் எதுவும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. குறைகளற்ற இறைமார்க்கமான இஸ்லாத்தில் பயங்கரவாததிற்கு அறவே இடமில்லை. அது மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு பதிலடியாக போது மன்னிப்பையும், கருணையையும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், தமது அன்பு மகளை கீழே தள்ளி அவளுடைய அகால மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிக்கும் தமது உற்ற தோழரின் உடலைக்கிழித்து அவருடைய ஈரலைக் கடித்து துப்பிய பயங்கரவாதிக்கும் இன்னும் தமக்கும் தம்மைச் தார்ந்தவர்களுக்கும், கொடுமைகள் பல இழைத்த கொடியவர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்கியதன் மூலம்

'கப்ல மௌதிஹீ' - ஒரு விளக்கம்


(வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)

கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது "வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) 'மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்'.

எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள்

கிறிஸ்தவர்களின் வினோதமான தத்துவம்

 
கிறிஸ்து, உலக மக்களின் பாவங்களுக்காகப் பிறந்து சிலுவை மரணத்தை அடைந்தார் என்பது அவருடைய 'சபிக்கப்பட்ட மரணத்தினால்' மற்றவர்கள் மீட்கப்பட்டார்கள் என்பதும் பாவிகளைக் காப்பதற்கு அல்லது இரெட்சிப்பதற்கு  சர்வ வல்லமையுள்ள தேவன் தனது மாசற்ற மகனைக் கொன்றார் என்பதும் அவர்களின்(கிறிஸ்தவர்களின்) கூற்றாக இருக்கின்றன. 

ஒரு மனிதனுடைய மரணத்தினால் மக்களின் உள்ளத்திலுள்ள பாவத்தின் தீய குணத்தை எப்படி துடைக்க முடியுமென்பதும், குற்றமற்ற மனிதனைக் கொலை செய்வதன் மூலம் மற்றவர்களின் பாவத்திற்கு அதனை பரிகாரம் ஆக்குவது எவ்வாறு என்பதும் நமக்கு புரியவில்லை! 

73 பிரிவுகளில் நேர்வழிபெற்ற பிரிவு எது?


நபி (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் தமது சமுதாயம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கீழ்வருமாறு முன்னறிவித்துள்ளார்கள்:-

"ஒரு ஜோடி காலனிகளுள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது போன்று இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நிகழ்ந்தது அனைத்தும் எனது சமுதாயத்திற்கும் நிகழும். இஸ்ரவேலர்கள் எழுபத்துஇரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்துமூன்று பிரிவுகளாகப் பிரியும் (அவற்றுள்) ஒரு பிரிவாரைதவிர ஏனைய பிரிவினர் அனைவரும் 'நரகை அடைவர்' இறை தூதரே! அந்த பிரிவு எது? என்று வினவப்பட்டபோது நானும் எனது சஹாபாக்களும் எவ்வாறிருப்பார்களோ அந்தப் பிரிவு என

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை


திருக்குர்ஆன் விளக்கம் - ஈசா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (16-11-2001) ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கூளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன்

ஈசா(அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்யும் திருக்குர்ஆன் வசனங்கள்.


ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி மரணித்துவிட்டார் என்று காட்டும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

" மரியமின் மகன் ஈஸாவே, அல்லாஹ்வைத் தவிர என்னையும் எனது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் கூறினீரா என்று அல்லாஹ் கேட்பான். அவர் கூறுவார். நீ தூய்மையானவன், எனக்குத் தகாததை நான். கூறியதில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே நன்கு அறிந்தவனாவாய் என்று கூறுவார். (மேலும்) நீ எனக்கு கட்டளை