அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இறைவனின் தீர்ப்பே இறுதியானது


'ஜமாத்துல் உலமா' ஆசிரியரை ஒரு விஷயத்திற்காக நாம் பாராட்ட வேண்டும்! அவர் தனது தந்தை வழியை தப்பாது கடைப்பிடித்து வருவதோடல்லாமல் தந்தையாரின் அந்தக்கால சரக்குகளுக்கு, அவை 'அவுட் ஆப் டேட்' ஆனவையாய் இருந்தும், தகுந்த 'மார்கெட்' பிடிக்க தவறாது முயன்று வருகிறார்.

எங்கேயாவது அஹ்மதியா இயக்கத்திற்கு எதிரான செய்திகள் காணப்படுகிறதா என எதிர்பார்த்து காத்திருந்து அவற்றைக் கண்டவுடன் தனது ஏட்டில் வெளியிட்டு தனது தந்தையாரின் நூல்களுக்கு அதோடு விளம்பரமும் செய்து வருகிறார். இந்தச் சாதுர்யம் யாருக்கு வரும்?

இறுதி வெற்றி இறைத்தூதர்களுக்கே


ஓர் இறைத்தூதருக்கு எதிராக அவரின் எதிரிகளின் வாயிலிருந்து வெளிப்படும் வசை மொழிகள், சத்தியத்திற்கு எதிராக எழுதப்படும் எழுத்துக்கள் ஆகியன இறை கோபத்திற்கு ஆளானவைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை அவர்கள் தங்களின் கரங்களாலே தேடிக் கொள்கின்றனர். பிறரை வசைமொழிவதும், இட்டுக்கட்டிப் பேசுவதும் இறைசாபத்திற்கு உரியனவையே . தங்களுடைய திட்டங்களாலும் அடிப்படையில்லாத ஆதாரமற்ற பொய்க்கூற்றுகளாலும் இறைவனின் என்னத்தை முறியடிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா? அல்லது உலகை ஏமாற்றி, வானத்திலிருந்து தீர்ப்பளிக்கப்பட்ட இறைவனுடைய பணிகளை நிறுத்தி விடலாம் என கருதுகின்றார்களா? சத்தியத்திற்கு எதிராக இவர்களது

ஒப்புதல் வாக்குமூலம்


"நபிவழியில் செயல்படுகிறோம் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிரிவுகள், ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகி, நான்கு ஐந்தாகி பல்கிப் பெருகிவருகிறது. பிரிவினை வாதத்தில் மத்ஹபு வாதிகளை இந்த இயக்க கழக வாதிகள் மிஞ்சிவிட்டார்கள். இது ஒன்றே இவர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இல்லை, வழி கேட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். வழி கேட்டில் செல்லும் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை லட்சமென்ன? எத்தனை கோடியாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் எந்த மதிப்புமில்லை. சிப்பிகள் உடைக்கப்பட்டு, பிரித்து வெத்து சிப்பிகள் ஒரு பெரும் அம்பாரமாகவும் முத்துச் சிப்பிகள் ஒன்றிரண்டும் வைக்கப்பட்டிருக்கிற நிலையில் வெத்து சிப்பிகலான அந்த

கிறிஸ்மஸ் ஒரு கேள்விக்குறி


டிசம்பர் 25 ஆம் நாளைக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக - கிறிஸ்மஸ் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் 25 அல்ல!

இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பதற்குப் பைபிளிலேயே ஆதாரம் இருக்கிறது. லூக்கா 2:8 இல் இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கையில், "அப்போது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசுவின் இரண்டாவது வருகை - ஒரு தவறான கண்ணோட்டம்


'இரண்டாவது வருகை' பற்றிய நம்பிக்கை இயேசுவின் காலத்தில் கூட இருந்தது. எலியா தீர்க்கதரிசி மீண்டும் வருவார் என அக்காலத்து யூதர்கள் நம்பினார்கள். (இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.) ஏனெனில் பழைய ஏற்பாட்டில் ,

"எலியா சுழல் காற்றில் பரலோகத்திற்கு ஏறிப்போனான்" (11 இராஜாக்கள் 2:7)

என்று காணப்படுகிறது. ஆனால் எலியா வானத்திலிருந்தோ பரலோகத்திலிருந்தோ வருவார் என்பதை இயேசு ஏற்கவில்லை. புதிய

ஏற்பாட்டில் இவ்வாறு காணப்படுகிறது. :-

இமாம் மஹ்தி(அலை) அவர்கள் மக்களின் பணத்தை மோசடி செய்தார்களா? - கடையநல்லூர் அக்ஸாவிற்கு பதில்


அல்லாஹ் கூறுகின்றான்:

"மேலும் நிச்சயமாக உமக்கு முன்னரும் தூதர்கள் ஏளனத்திற்கு ஆளானார்கள். ஆனால் அவர்கள் எந்த ஆக்கினையைக் குறித்து ஏளனம் செய்தார்களோ அதே ஆக்கினை அவர்களை வந்தடைந்தது"

"உலகை சுற்றிப் பாருங்கள் நபிமார்களைப் பொய்யராக்கி கொண்டிருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் காணுங்கள்" என்று (நபியே நீர் அவைகளுக்குக்) கூறுவீராக!

இன்னுமொன்றையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அஹ்மதியா

தவ்ஹீதின் தத்துவம்

 
ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

புனித கலிமாவில் பொதிந்துள்ள கருத்தை கவனியுங்கள் ! “லாயிலாக இல்லல்லாஹ்” என்ற கலிமாவை ஒரு மனிதன் நாவினால் மொழிந்து அதன் பொருளான, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. என்பதை தனது உள்ளத்தில் உறுதிபடுத்துகிறான். “இலாஹ்” எனும் அரபி மொழிச் சொல் வணக்கத்திற்குரியவன், நேசத்திற்குரியவன், விருப்பத்திற்குரியவன் என்றெல்லாம் பொருள்படும்.

இந்தக் கலிமா முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள திருக்குர் ஆனின்

காத்தமுன்னபிய்யீன் - ஓர் ஆய்வு


அகிலத்திற்கும் அருட்கொடையாகத் தோன்றிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறமிருந்து கிடைத்த் ஒப்பற்ற, மகத்துவமிக்க பட்டம் தான் காத்தமுன்னபிய்யீன் என்பது. இதைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

மாகான முஹம்மதுன் அபா அஹதின் மின் ரிஜாலிகும் வலாகின் ரசூலுல்லாஹி வ காத்தமுன்னபிய்யீன். (33:40)

'முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தையல்ல. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் காதமாகவும்(முத்திரை)

இமாம் மஹ்தியை நிராகரிப்பவர்கள் யார்?


ஆதம் நபி முதல் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த தூதர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார்கள். இறுதியில் இவ்விறை தூதர்களே வெற்றிபெற்றார்கள்.

ஆதமின் சந்ததிகள் மீது வருத்தப்பட்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். 'அந்தோ பரிதாபம்! மக்களிடம் எப்பொழுதெல்லாம் இறைத்தூதர்கள் தோன்றினார்களோ அப்பொழுதெல்லாம் மக்கள் அவர்களை எதிர்த்தும் ஏளனம் செய்தும் அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும் ஆளாக்கினார்கள்" அல்லாஹ் நமக்கு எடுத்துரைக்கும் சட்டம் இதுதான். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டப்படி மக்களால் எதிர்க்கப்பட்ட எதிர்ப்பு அணி திரட்டப்பட்ட -நபிமார்களை, மக்கள் எதிர்க்கின்றார்கள் என்ற ஒரே

கிறிஸ்தவர்கள் பதில் கூறுவார்களா?


  1. காணமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரத்தார்களுக்குப் போதிப்பதற்காகவே இயேசு அவதரித்தார் என்றால், இரண்டே, இரண்டு இஸ்ரவேல் கோத்திரத்தார் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டில் மட்டுமே போதித்து விட்டு, சிலுவையில் இயேசு உயிர் துறந்தார் என்றால், இயேசு தமது போதிக்கும் கடமையில் தோற்று விட்டார் என்ற கூற வேண்டுமல்லவா? 
  2. புற ஜாதியாருக்கு சுவிசேசத்தை போதிக்க, ஒரு புறத்தில் தடை விதித்துவிட்டு, மறுபுறத்தில் இயேசு தமது சீடர்களை நோக்கி '....சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.' என்று கூறியது

ஆங்கிலேயர்களின் கைக்கூலி யார்?


அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு இவர்களின் தாஜ்ஜாலியத்திற்கான (பொய்யர்கள்) சிறந்த உதாரணமாகும். அஹ்மதியா இயக்கத்தின் உலகளாவிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு பொறாமையும், காழ்புணர்ச்சியும் கொண்ட அல் அமீன் ஏட்டின் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

"காதியானி இயக்கம் என்ற ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மூலையில் ஆங்கிலேயர்களின் ஒத்துழைப்புடன் உருவானது".

இந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முக்கிய ஆயுதமே பிரித்து ஆளுவதுதானே! அவர்களின் இந்த முயற்சி முஸ்லிம்கள் மத்தியில் ஒரு