அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

திருக்குரானும் இயேசுவும்


'இயேசுவைப் பற்றி திருக்குரானில் கூறப்பட்டிருக்கிறது' என கிருஸ்தவ போதகர்கள், முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்து வரும் இந்நாட்களில், இயேசுவை பற்றியும் இக்கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்பற்றியும் திருக்குர்ஆன் என்ன கூறி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி அது எந்த வகையில் பைபிளுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கிட விரும்புகிறோம்.

"எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்" (1 தெசலோனி 5:21) என்ற பைபிளின் போதனைக்கிசைய இக்கருத்துக்களை கிருஸ்தவ நண்பர்கள் நடு நிலை நின்று ஆராய்ந்து உண்மையெனக்

இறுதி நபித்துவ பேரவையின் (மௌதூதி கூட்டத்தின்) சூழ்ச்சியும் இயக்கத்தின் எழுச்சியும்


அஹ்மதியா இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தானிலுள்ள முல்லாக்கள் அங்குள்ள பாமர மக்களைத் தூண்டி வன்முறையிலும் காட்டுமிராண்டித்தனத்திலும் அவர்களை ஈடிபடுத்தி வருவதைப் போன்று இங்கும் குழப்பத்தை ஏற்படுத்த சில முல்லாக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முயன்று வருகின்றனர். 'தஹப்புஸே கதமுன் நுபுவத்'.இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை இவர்கள் ஏற்படுத்தி இருப்பதும் அதன் முதல் கூட்டத்தை சென்னையில் நடத்தி அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக சில அபத்தமான தீர்மானங்களை வெளியிட்டிருப்பதும் பாகிஸ்தான் பயங்கரவாத முல்லாக்களை இவர்கள் பின்பற்ற நினைக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில் இந்த 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' முதன் முதலில் உருவாக்கி செயல்பட்டு வருவது பாகிஸ்தானிலேயேயாகும்.

இவர்களின் அமைப்பிற்கு இவர்கள் சூட்டியுள்ள 'தஹப்புஸே கதமுன்

ஜைனுலாப்தீனுக்கு மறுப்பு- முகம்மதி பேகம் பற்றிய ஆட்சேபனைக்கு பதில்


இஸ்லாம் மீண்டும் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும். முஸ்லிம்கள் முன்பு பெற்றிருந்த பெருமைகளையும் மகத்துவங்களையும் மீண்டும் பெற வேண்டும். அழிவைநோக்கி சென்றுகொண்டிருக்கும் மனித சமுதாயம் இறைவன் பால் திரும்ப வேண்டும். என்பன போன்ற உயரிய நோக்கங்களை உலகில் நிலை நாட்ட இறைவன் புறமிருந்து இக்காலத்தின் இறைத்தூதராக இமாம் மஹ்தியாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தோன்றினார்கள். இத்தகைய உயர்ந்த இலட்சியங்களுக்காக இவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத், இன்று உலகின் எல்லைகள் வரை கிளை பரப்பி தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இமாம் மஹ்தியின் வருகையும் - அல் ஜன்னத் ஏட்டின் அறியாமையும்.


ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றியது பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'அல் ஜன்னத்' இதழில், அதன் ஆசிரியர் அளித்துள்ள ஒன்றரைப் பக்கபதிலில், ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றித் தமது அறியாமையை. வெளிப்படுத்தி இருப்பதோடு தமது ஆணவத்தையும் பறை சாற்றியிருக்கிறார்.

அவர் தமது அறியாமையிலிருந்தும், ஆணவத்திலிருந்தும் விலகி நல்லவராகவேண்டும் என்பதற்காக சமாதானவழி இதழ் மூலமாக அவருக்கு சில அறிவுரைகளைக் கூறப்பட்டிருந்தது

இதன் தொடர்ச்சியாக 'அல் ஜன்னத' ஆசிரியருக்கும் அவரைப்

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கொள்கையினை குறித்து சிராஜ் அப்துல்லாஹ்வின் அறியாமை


இக்காலத்தில் எல்லா இஸ்லாமிய பிரிவுகளும் பிற இஸ்லாமிய பிரிவுகளை குறைக் கூறிக் கொண்டு அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள், எனவே நாங்களே சரியான பிரிவு என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை போல் சுயமாக ஒரு பிரிவை ஏற்ப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் இக்கால மக்களை சரி செய்வதற்காக தன் புறமிருந்து ஒருவரை அனுப்பியுள்ளான். அவர் அல்லாஹ் மற்றும் ரசூலால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தியும் மஸீஹும் ஆவார். அவரை பின்பற்றுவதன் மூலமே குழப்பங்களுக்கு தெளிவும் வழிகேட்டிலிருந்து நேர் வழியும் கிடைக்கும்.எனவே இறைவனால்

திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் P.J யின் அட்டகாசம்


ஒரு நபிக்கு கொடுக்காத சிறப்பை வேறொரு நபிக்குக் கொடுத்திருப்பது உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லா நபிமார்களைவிடவும் காத்தமுன் நபியாகிய நபி(ஸல்) அவர்களுக்கு எல்லாவகையிலும் அந்தஸ்தையும் சிறப்பையும் கொடுத்திருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? மறைமுகமாக அல்லாமல் நேரடியாக பதில் கூறுங்கள். நாங்கள் குரானின் அடிப்படையிலேயே மறுத்து நபி(ஸல்) அவர்கள்தான் எல்லா நபிமார்களை விட எல்லாவகையிலும். சிறந்தவர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படாத எந்த அந்தஸ்தையும் வேறொரு நபிக்குக் கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறோம். நிரூபித்துக்காட்டி வருகிறோம்.