திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 177 இல் வானத்தின் வாசல் திறக்கப்பட
மாட்டாது என்னும் தலைப்பில் பி.ஜே திருக்குர்ஆன் 7:40 வது வசனத்திற்கு
இவ்வாறு எழுதுகிறார்.
இறைவசனங்களை மறுத்துப் பெருமையடித்தவர்கள் இவ்வுலகில் வாழும் போது செய்யும் பிராத்தனைகள் வானத்தை அடையாது. இவ்வுலகிலும் நஷ்டமடைவார்கள்: மறுமையில் நரகத்தையும் அடைவார்கள் எனபது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.
நம் விளக்கம்:
திருக்குர்ஆன் 7:40 வது வசனத்தின் பொருள் பி.ஜே தன் தமிழாக்கத்தில்,
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம். இந்த வசனத்தில் சொர்க்கமும் நரகமும் எடுத்துக் கூறப்படுகிறது. இதற்கு முன் பின் வசனங்களும் (7:39; 7:41) சொர்க்கம் நரகம் பற்றியே கூறுகின்றன. எனவே இங்கு வானத்தின் வாசல் என்பது சொர்க்கத்தின் வாசல் என்றே பொருள்படும். மேலும் 7:40 வது வசனத்தை 7:36 வது வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
திருக்குர்ஆன் 7:40 வது
வசனம்
|
திருக்குர்ஆன் 7:36 வது
வசனம்
|
1)
நமது வசனங்களைப் பொய் எனக்
கருதி
|
1)
நமது வசனங்களைப் பொய் எனக்
கருதி
|
2)
அதைப் புறக்கணிப்போருக்கு
|
2)
அதைப் புறக்கணிப்போர்
|
3)
வானத்தின் வாசல் திறக்கப்படமாட்டாது.
|
3)
நரகவாசிகளே
|
இதிலிருந்து வானத்தின் வாசல் திறந்தால் சொர்க்கம் என்றும், திறக்கவில்லை என்றால் நரகம் என்றும் வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.
நபி (ஸல்) அவர்கள், எனக்கு முன்னர் வந்த இஸ்ரவேல் சமுதாயத்தினர் 72 பிரிவுகளாகப் பிரிந்தனர். என் சமுதாயம் 73 பிரிவுகளாகப் பிரியும், அந்த 72 பிரிவுகளாகப் பிரியும். அந்த 72 பிரிவுகளும் என்னைச் சேர்ந்தவர்கள் இல்லை. நான் அவர்களைச் சேர்ந்தவனும் இல்லை. அவர்கள் நரகிற்கு உரியவர்கள். அந்த ஒரு பிரிவு யார் என்றால், நானும் என் தோழர்களும் எப்படி இருக்கிறோமோ அப்படி அவர்கள் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். இதில் சொர்க்கத்திற்கு உரிய ஜமாஅத்தும், நரகிற்கு உரிய 72 பிரிவுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பைசல் மன்னர் காலத்தில் இஸ்லாத்தின் 72 பிரிவுகளும் அவரது தலைமையில் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்கியதும், பூட்டோ தலைமையில் பாகிஸ்தானில் 72 பிரிவுகளும் காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும் அந்த 72 பிரிவுகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு விளக்கி விட்டது.