ஈமான் கொள்ள வேண்டியவற்றுள் ஓர் அம்சம் மலக்குகள் மீது ஈமான் கொள்வதாகும். மலக்குகளைப்பற்றி பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்:
மனிதனின் தகுதியைப்பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.
இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள் இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபனை செய்திருப்பார்கள்? மலக்குகள் ஆரம்பத்தில் ஆட்சேபனை செய்தபோது அவர்களுடன் செய்த்தான் இருந்தான்.
மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்?
செய்த்தான் அவர்களை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபனைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபனை செய்திருப்பார்கள்?
நம் விளக்கம்:
சொர்க்கத்தில் மலக்குகளுடன் சைத்தானும் இருந்தால் ஆதமின் படைப்பு பற்றி ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும் – என்று பி.ஜே எழுதுகிறார்.
இந்த அபத்தமான கருத்துக்கு பி,ஜே.
1. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் தரமுடியுமா?
2. அல்லாஹ் அவர்களுக்கு (மலக்குகளுக்கு) எதைக் கட்டளை இடுகின்றானோ அதற்கு அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 66:6) என்ற இறைவசனத்திற்கு மாற்றமாக சைத்தானின் தூண்டுதலுக்கு இரையாகி மலக்குகள் ஆட்சேபனை செய்து சூடுபட்டார்கள் என்று பி.ஜே யினால் எப்படி என்ன முடிகிறது?
இரண்டாவதாக கலைச் சொற்கள் (அரபி) எனும் தலைப்பில் இப்லீஸ் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தால் இப்லீஸ்
நம் விளக்கம்:
இவருடைய இக்கூற்றுக்கு, திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்களை இவர் காட்ட முடியுமா? அவன் (ஏற்கனவே) நிராகரிப்பவர்களைச் சேர்ந்தவனாக இருந்தான். (2:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே இப்லீஸ் நல்லவனாக இருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவன் நிராகரிப்பவனாகவே இருந்தான் என்றும் இவ்வசனம் கூறுகிறது.
மூன்றாவதாக வானவர்கள் – மலக்குகள் நம்புதல் எனும் தலைப்பில் வானவர்கள் நரகின் காவலர்கள் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
வானவர்கள் சொர்க்க வாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள். – 13:23, 15:46, 21:103, 41:31
நம் விளக்கம்:
பி.ஜே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்களை நாம் பார்க்கின்ற போது மலக்குகள் பணிவிடை செய்தார்கள் என்று எங்கும் வரவில்லை. மாறாக, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்து சுவர்க்கவாசிகளுக்கு ஸலாம் ச்கூருவார்கள் என்றும் சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கக்கூடிய அருட்கொடைகளை எடுத்துக்கூறுவார்கள் என்றுமே வருகிறது. எனவே பி.ஜே கூறியுள்ள மலக்குகள் பணிவிடை செய்வார்கள் என்பது தவறான கருத்தாகும்.
நான்காவதாக, மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் மலக்குகளை மலைக்குள் மௌத் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பி.ஜே சுயமாக தரும் விளக்கத்தின் அடிப்படையில், ஈஸா நபி இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார் என்றால், மலைக்குள் மௌத்தால் கைப்பற்றப்பட்ட உயிர்களைத் திரும்ப அவர்களின் உடலில் புகுத்தும் மலக்கின் பெயர் என்ன? அந்த மலைக்கு அப்படி ஒரு செயலைச் செய்வார் என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் உண்டா?